• Jul 24 2025

பெண்களுக்கு எதிரானதை முதலில் மாற்றி அமையுங்கள்.. மகளிர் தினத்தில் பிரபல நடிகை கல்யாணி ஆதங்கம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின் ஹீரோயினாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் பன்முகத் திறமை கொண்ட ஒருவராக வலம் வந்தவர் கல்யாணி. 

இவர் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சென்று செட்டில் ஆகி விட்டார். இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பிய சமூகவலைதளத்தில் பல தத்துவக் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 


அந்தவகையில் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் வருகின்றது. இதற்காக தனது கடுமையான கண்டனம் குறித்த பதிவொன்றை பதிவிட்டுள்ளார் நடிகை கல்யாணி. அதாவது ''மகளிர் தினம்? ஒவ்வொரு நொடியும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் நாட்டில், கவுரவக் கொலைகள், குடும்ப துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு பெண்கள் பலியாகின்றனர். 

அதிலிருந்து மீண்டு வருவதற்கு திடீரென்று இந்த ஒரு நாள் மட்டும் போதுமா? அல்லது உலகம் நம்மிடம் மன்னிப்பு கேட்கவும், நாம் முன்னேற வேண்டும் என்று எதிர்பார்க்கும் என்பதற்காகவா இந்த ஒருநாள்? பெண்கள் தினத்திற்காக மக்கள் வாழ்த்து செய்திகளை அனுப்புவதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பவே வேதனையாக இருக்கிறது. 


ஆனால் பெண்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இன்னும் சந்திக்கும் பல பிரச்சினைகள் குறித்து கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். நம் அனைவரையும் ஒருகணம் சிந்திக்க வைக்க வேண்டிய நாள் இது. மகளிர் தினம் எதற்காக எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது? 

இந்த ஒரு நாளில் பெண்களை வாழ்த்துவதை விட, பெண்களுக்கு எதிரானவற்றை மாற்றி எங்களுடன் நிற்பதற்கான முயற்சியை நீங்கள் மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாது அனைத்து பாலின மக்களுக்கும் சமமான உலகத்தை உருவாக்குவதே உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக ஆக்குங்கள்" என தனது கடுமையான விமர்சனத்தை குறிப்பிட்டுள்ளார் நடிகை கல்யாணி.


Advertisement

Advertisement