• Jul 24 2025

பிரமாண்டமாக இடம்பெறும் 'மாமன்னன்' இசைவெளியீட்டு விழா... சிறப்பு விருந்தினராக களமிறங்கும் உலகநாயகன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தற்போது 'மாமன்னன்' திரைப்படம் தயாராகி வருகின்றது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


அத்தோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் வடிவேலு பாடிய 'ராசாக்கண்ணு..' பாடல் வெளியாகி செம ட்ரெண்ட் ஆனது.


இதனையடுத்து இன்றைய தினம் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறுகின்றது. அந்தவகையில் உதயநிதி திரைப்பயணத்தில் இதுதான் கடைசிப் படம் என்பதால் பிரமாண்டமாக நடைபெறும் இந்நிகழ்வில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement