• Jul 25 2025

நான் அதைப் பண்ணினால் இவங்க ஏன் கேட்கிறாங்க- கடும் கோபத்தில் பதிலடி கொடுத்த நடிகை க்ரித்தி ஷெட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!


19 வயதான க்ரித்தி ஷெட்டி உபென்னா படத்தில் இருந்தது போல இல்லை என்றும் சமீபத்தில் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்ட நிலையில், தான் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் படு தோல்வியை சந்தித்து வருவதாக நெட்டிசன்கள் பயங்கரமாக கடந்த சில நாட்களாக க்ரித்தி ஷெட்டியை ட்ரோல் செய்து வருகின்றனர். 

நயன்தாரா, சமந்தா என ஏகப்பட்ட நடிகைகள் சினிமாவுக்கு வந்த போது ஒரு லுக்கிலும் அதன் பின்னர் காஸ்மெடிக் சர்ஜரிக்களை செய்துக் கொண்டு வேறு ஒரு லுக்கிற்கும் மாறுவது வழக்கமான ஒன்று தான். இந்நிலையில், க்ரித்தி ஷெட்டியும் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என ட்ரோல்கள் பறந்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் க்ரித்தி ஷெட்டி.


சோஷியல் மீடியாவில் பாசிட்டிவான விமர்சனங்களை பார்க்கவே முடிவதில்லை. அதற்கு பதிலாக நெகட்டிவிட்டி தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டால் அவர்களுக்கு என்ன ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டும், தோற்றத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது எல்லா நடிகர்களும் நடிகைகளும் செய்வது சாதாரண ஒன்று தானே, நான் செய்தால், அவங்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை என பேசி ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தில் மாணவியாக நடித்த க்ரித்தி ஷெட்டி விஜய்சேதுபதிக்கு மகளாக உப்பெனா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வந்த க்ரித்தி ஷெட்டிக்கு தமிழில் வாரியர் படத்தை தொடர்ந்து கஸ்டடி படமும் தோல்விப் படமாக மாறியது என்தும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement